சூரிய வெப்பம் அதிகமானதால் சாலையோரத்தில் இருந்த மரங்கள் தீப்பற்றி எரியும் சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலையில் தானாக தீ பற்றி எரிந்த மரங்கள்! அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்! எங்க தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் மிகுதியாக வீசுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்ப நிலை மிகவும் அதிகமாக உள்ளதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களுக்கு சென்று தங்குகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று விவசாய நிலங்கள் திடீரென்று பற்றி எறிந்துள்ளன. இதனை கண்ட விவசாயிகள் பேரதிர்ச்சி அடைந்தனர். பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் வெப்ப நிலை அதிகமாக உள்ளதால் விவசாயிகளை அறுவடை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
அங்குள்ள மாண்ட்பெல்லியர் எனும் நகரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களில் திடீரென்று பற்றிக் கொண்டு எரிந்துள்ளன. அவ்வழியே சென்ற பொதுமக்கள் இந்த நிகழ்வை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதிக்கு அருகே செல்லும்போது மிதமான வேகத்தில் செல்கின்றனர்.
சிலர் வீட்டை விட்டு வெளிவராமல் முடங்கியுள்ளனர். வெப்பநிலை அதிகரித்துள்ள சம்பவமானது ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.