தியா! மிர்துளா! லயோலா கல்லூரியை கலக்கும் 2 திருநங்கைகள்! எப்படி தெரியுமா?

சென்னை லயோலா கல்லூரியில் 2 திருநங்கைகளுக்கு அவர்கள் விருப்பப்படி கல்வி வாய்பினை வழங்கிய லயோலா கல்லூரி நிர்வாகத்தின் முன் மாதிரி செயல் அனைவரிடமும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


திருநங்கை சமூகத்தை சேர்ந்த இதுவரை சாதித்து தங்களுக்கான தனி மரியாதை யை உருவாக்கியவர்கள் மத்தியில்  போரூர் மற்றும் நுங்கம்பாக்கம் சேர்ந்த மிர்துளா மற்றும்  தியா தங்களது குடும்பத்தினரால் கைவிடப்ப்பட்டவர்கள். எனினும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு தேர்வை சில வருடங்கள் முன்னரே தேர்ச்சி பெற்றவர்கள்.

தொடர்ந்து நீண்ட விடா முயற்சியின் காரணமாக சென்னை லயோலா கல்லூரியில் தங்களுக்கான கல்வி வாய்ப்பை பெற்றுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கல்லூரி முதல்வர் - தாமஸ்:- லயோலா கல்லூரியில் பிற்படுத்தபட்ட மற்றும் கல்வி வாய்ப்பு மறுக்கபட்ட பலர் படித்து தற்போது நல்ல நிலையில் உள்ளனர்

ஏற்கனவே 4 திருநங்கைகள் இதுவரை லயோலா வில் படித்து நல்ல உயர் பதவியில் இருப்பதை தொடர்ந்து தியா மற்றும் மிர்துளாவிற்க்கும் அவர்கள் விருப்பபடி தேர்வு செய்த பாட பிரிவுகளை வழங்கியுள்ளதாக கூறினார். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த தியா மற்றும் மிர்துளா, திருநங்கை சமூகத்தினருக்கான வாய்ப்புகள் இது போலவே அதிகரிக்க பட வேண்டும்

அதிலும் மாவட்டந்தோறும் உள்ள கல்வி நிறுவனங்கள் தாமாக முன் வந்து மூன்றாம் பாலினத்தினர்க்கான கல்வி வாய்பினை வலுபடுத்த கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களுக்கு கிடைத்த வாய்பினை முறையாக பயன்படுத்தி மற்றவர்களுக்கும் உதாரணமாக இருப்போம் என பூரித்தனர்.

மூன்றாம் பாலினத்தவருக்கு தானாக முன்வந்து வாய்ப்பை வழங்கி உற்சாகப்படுத்திய லயோலா கல்வி நிறுவனத்தின் முன் மாதிரி செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.