விபச்சார தொழிலில் போட்டி! சவுமியாவை தேடி தேடி வந்த டிரைவர்கள்! ஆத்திரத்தில் திருநங்கைகள் செய்த விபரீதம்!

பணம் பகிர்ந்து கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவரை 9 திருநங்கைகள் கொலை செய்து நதிக்கரையில் உடலை வீசிய சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் முதலில் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அந்த சடலத்தை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த திருநங்கையின் பெயர் சௌமியா என்பதாகும். இவர் பல திருநங்கைகளுடன் கூட்டாக மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். 7-ஆம் தேதியன்று இவருக்கு மற்ற திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பணம் பகிர்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்ட நிலையில் பிற திருநங்கைகள் இவரை கொலை செய்து கல்குவாரியில் வீசியுள்ளனர். இந்நிலையில் இந்த செய்தியானது திருநங்கைகளின் தலைவியான மகா என்பவருக்கு தெரியவந்துள்ளது. பிற திருநங்கைகளை மிரட்டியுள்ளார்.

சௌமியாவின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தனக்கு 3,000 ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். பயந்துபோன திருநங்கைகள் காஞ்சிபுரம் அருகே தஞ்சம் புகுந்தனர். மகா தன்னுடைய அடியாட்களை அனுப்பி அவர்களை தேடி அலைந்துள்ளனர்.

ஒருவழியாக அவர்களை தேடி கண்டுபிடித்து காரில் கடத்தி வந்து கொண்டிருந்தபோது உத்திரமேரூர் பகுதியில் காவல் துறையினரிடம் பிடிபட்டனர்.அப்போது நடத்திய விசாரணையில் காவல்துறையினரிடம் 9 திருநங்கைகளும் தாங்கள் தான் சௌமியாவை கொன்றது என்று ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திருநங்கைகளில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். மதுரவாயல் - தாம்பரம் நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்களை குறி வைத்து இவர்கள் தொழில் செய்து வந்துள்ளனர். மொத்தமாக சேர்ந்து தொழில் செய்து வந்த இவர்கள் கடைசியில் மொத்த வசூலை சரிபாதியாக பிரித்துக் கொண்டனர்.

ஆனால் சவுமியாவை தேடி நிறைய லாரி டிரைவர்கள் வந்துள்ளனர். இதனால் சவுமியா தனக்கு கூடுதல் பங்கு கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சவுமியாவை திருநங்கைகள் தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக அவரை கல்குவாரி குட்டையில் வீசி இவர்கள் தப்பி தற்போது சிக்கியுள்ளனர்.