கரூர் தொகுதியை குறி வைக்கும் திருநங்கை அப்சரா! காங்., வேட்பாளராக பலே பிளான்!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து பாண்டிச்சேரி தொகுதி உட்பட 10 இடங்களில் போட்டி இடுகிறது. இதற்கான விரும்பமனுவை நேற்று முதல் காங்கிரஸ் தலைமை கமிட்டியில் வழங்கி வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் விருப்பமனுவை கொடுத்து வருகின்றனர்.


 இன்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர், மகிளா காங்கிரஸ் மற்றும் திருநங்கை அப்சரா ரெட்டி விருப்பமனுவை கொடுத்தார் .

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில், கட்சி எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தால்  பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில்  குரல் எழுப்புவேன் என்றும், திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.

எல்லா குரலும் சமமாக கேட்டால் தான் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் எல்லா சமுகத்திற்கும் நல்லது செய்யமுடியும். ஒதுக்கபட்ட சமுகமாக பார்க்கபடும் திருநங்கை சமுகத்திற்கு பாடுபடுவேன், நிச்சியம் அதற்காக போராடுவேன் என்றார், 

எங்களது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்றும், காங்கிரஸ் தலைமை நல்ல முடிவை எடுக்கும் என நினைக்கிறேன் என்றும்,  கரூர்,ஆரணி தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார்.