திடீரென வெடித்து தீ பிடித்த மின்சார டிரான்ஸ்பார்மர் பெட்டி! அருகே நைட்டியில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! பதற வைக்கும் சிசிடிவி!

சாலையோரத்தில் இருந்த மின்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியான சம்பவமானது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.


சென்னை சூளைமேடு பகுதியில் மேற்கு மிண்ட் தெரு எனும் இடம் அமைந்துள்ளது. 4-ஆம் தேதியன்று லீமா ரோஸ் என்ற இளம்பெண் இந்தத் தெருவில் இருந்த மீன் பெட்டிக்கு அருகே நின்று கொண்டு செல்போனில் உரையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. லீமாரோஸ் மீதும் தீ பரவி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, லீமா ரோஸ் மீன் பெட்டிக்கு அருகில் நின்று கொண்டு செல்போனில் உரையாடியது தெரியவந்துள்ளது. சில வினாடிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் சிசிடிவி கேமரா பதிவுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

இதே மின் பெட்டியில் இதற்கு முன்னர் 2 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இப்பகுதியில் பள்ளி இருப்பதாகவும் பொதுமக்கள் மின்வாரியத்திடம் முறையிட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின்பெட்டியில் திடீரென்று தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் கேட்டு காவல்துறையினர் அப்பகுதி மின்வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சம்பவமானது சூளைமேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.