கொரோனா வைரஸ் எதிரொலி! நாடு முழுவதும் பயணிகள் ரயில் மார்ச் 31ம் தேதி வரை ரத்து! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக பயணிகள் ரயில் மார்ச் 31ம் தேதி வரை இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 300க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதன் காரணமாக இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் இந்தியா முழுவதும் மக்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வருவதால் இந்தியா முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் ரயிலை இந்த மாதம் 31ஆம் தேதி வரை ரத்து செய்து இந்திய ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.