குடிபோதை! லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லை! டிராக்டர் டிரைவருக்கு ரூ.59 ஆயிரம் அபாராதம்!

போக்குவரத்து விதியை மீறிய டிராக்டர் ஓட்டுநருக்கு 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலத்தில் குருகிராம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு நியூ-காலனி சந்திப்பில் சிக்னலை மதிக்காமல் டிராக்டர் ஓட்டுநர் சென்றுள்ளார். அவருடைய பெயர் ராம் கோபால். காவல்துறையினர் அவரை வளைத்து பிடித்தனர்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது, வாகன விதிமுறைகளை மீறியது, தகுந்த சான்றிதழ்கள் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் ராம் கோபால் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் சட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த காவல்துறையினர் இதுப்போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ராம்கோபால் செங்கல் ஏற்றி சென்ற லாரியையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ராம்கோபாலுக்கு அதிகபட்சமாக 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3-வது முறையாக திருத்தப்பட்ட மசோதாவின் கீழ் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

முன்னதாக ஒரு இருசக்கர வாகன ஓட்டுனருக்கு 23 ஆயிரத்து 500 ரூபாவும், ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு  32 ஆயிரத்து 500 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது குருகிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.