ஈடன் கார்டெனில் மாஸ் காட்டப்போவது தோனியா? ரஸ்ஸலா? பழி வாங்க காத்திருக்கும் தினேஷ் கார்த்திக்!

இன்று இரண்டு போட்டிகள் ipl ல் நடைபெறவுள்ளன. மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.


இந்த இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இது வரை விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ரஸ்ஸலை வீழ்த்தினால் சென்னை அணி வெற்றி பெறுவது சுலபம். அனால் ரஸ்ஸல் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவதால் அவர் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் சன் ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி டெல்லி சாப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.டெல்லி 4வது இடத்திலும், சன் ரைசேர்ஸ் 6 வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.