தி.மு.க., பா.ஜ.க. கெடு இன்று முடிகிறது! கட்சி அலுவலகத்திற்கு நடந்து வந்த கேப்டன்! சென்டிமென்ட் பிரேமலதா!

இன்றுடன் கூட்டணி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ஸ்டாலின் ஏற்கெனவே தே.மு.தி.க.வுக்கு கெடு முடிவடைவதை முன்னிட்டு தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கும் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


அமெரிக்காவில் இருந்து வந்தபோது வீல் சேரில் வந்த விஜயகாந்த், இன்று தே.மு.தி.க. தலைமையகத்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் காரில் வந்து இறங்கினார். யாருடைய துணையும் இன்றி சில அடிகள் அவரே நடந்து வந்ததும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்திருப்பதும், அங்கு ஆலோசனை நடத்துவதும் பிரேமலதா சென்டிமென்ட் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் கடைசி இரண்டு தேர்தல் விவகாரங்களும் வீட்டில் பேசப்பட்டு முடிவு எடுத்ததால் தோல்வியைத் தழுவியது. 

நேற்று டெல்லியில் இருந்து அமித் ஷாவும் தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது, அதனால் உடனே ஒப்புகொள்ளுங்கள். 6ம் தேதி பிரதமர் முன்பு மேடையேற வேண்டும் என்று வலியுறுத்தினாராம்.

ஒரே நேரத்தில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கெடு விதித்து இருப்பதால், அது குறித்து தெளிவான முடிவு எடுத்து இன்று நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் சென்டிமென்டாக சனிக்கிழமை அந்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இப்போதைக்கு விஜயகாந்த், பிரேமலதா இருவரும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சுதீஷ், குட்டி கேப்டன் இருவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.