தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் எத்தனை பேருக்கு தெரியுமா? தலை சுற்ற வைக்கும் தகவல்!
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றுவரை 4058 ஆக இருந்தது. குறிப்பாக சென்னையில் நேற்றுவரை சுமார் 2000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 771 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 324 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 324 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது சென்னை வாசிகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கடந்த சில நாட்களாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோயம்பேடு சந்தை சென்னை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக நிலவி வருகிறது .