சன் ரைசர்ஸ் அணியை சமாளிப்பாரா அஸ்வின்! மோசமான தோல்வியில் இருந்து மீளுமா SRH!

கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான IPL போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் தொடங்கவுள்ளது.


கிங்ஸ் XI பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்ற பெற்று 6  புள்ளிகளுடன் 6வது இடத்தில உள்ளது. சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்ற பெற்று 6  புள்ளிகளுடன் 3வது இடத்தில உள்ளது.

இந்த இரு அணிகளுமே தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கிங்ஸ் XI பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது. இதனால்  இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.