என் கணவர் சடலத்தை மறுபடியும் தோண்டி எடுக்க..! கதறியபடி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டாக்டர் மனைவி! அதிர வைக்கும் காரணம்!

பொது நலத்துடன் பணியாற்றிய எனது கணவர் டாக்டர் சைமனின் உடல் அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்களே என்றும் புலம்பும் மனைவி முதலமைச்சருக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள் வித்துள்ளார் .


டாக்டர் சைமன் அவர்கள் ஹெர்குலஸ் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர். ஏழை மக்களிடையே மிகவும் அன்பு, அக்கறை கொண்டவர். அவருடைய கடினமான உழைப்பால் மருத்துவத்தில் பல பட்டங்களை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மருத்துவத்தில் பல ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார்., 

 அனைவரியின் அன்பையும் பெற்று டாக்டர் சைமன் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். ஏறத்தாழ சுமார் 60-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி மருத்துவ உதவிகளை செய்தார்.

டாக்டர் சைமன் அவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மருத்துவமனை நடத்தி வந்தார். அங்கு தினமும் ஏராளமான நோயாளிகளை பரிசோதிப்பது வழக்கம். வெளிநாட்டுக்கு எங்கும் சமீபத்தில் அவர் போனது இல்லை. எந்த வெளி இடங்களுக்கும் போனது இல்லை. மருத்துவமனை விட்டால் வீடு, வீட்டை விட்டால் மருத்துவமனை இதை தவிர வேறு எங்கேயும் போகமாட்டார் டாக்டர் .

இந்த சூழ்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த அவருக்கு ஏதோ ஒரு நோயாளியிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அறிந்த உடனே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சையின் பயனாக நன்றாக குணமடைந்த நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவரின் குடும்பத்தினர் மிகவும் மனம் உடைந்துவிட்டனர். ஆனால் இதில் வேதனை  என்னவென்றால் அவருடைய உடலை மரியாதையோடு அடக்கம் செய்ய முடியவில்லை என்பதுதான். கடந்த 30 ஆண்டுகளாக பொது நலத்துடன் பணியாற்றிய அவரின் உடலை அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்கள்.

மிகவும் வருத்ததுடன் புலம்பிய அவரது மனைவி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில்  அவரை  முறைப்படி அடக்கம் செய்ய நினைத்துள்ளார்கள். ஆனால் அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படியே அவரது உடலை வேலங்காடு சுடுகாட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். அங்கு அவரை அடக்கம் செய்யப்போகும் நேரத்தில் வெளியே இருந்து கற்களையும், கம்புகளையும் தூக்கி வீசியதால் எங்கள் எல்லோருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு, அப்படியே அவருடைய உடலை தூக்கிக்கொண்டு மீண்டும் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்றுள்ளார்கள்.

பின்னர் பல போராட்டங்களை தாண்டி, வேலங்காடு மயானத்தில் 2 டாக்டர்கள், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து வெளியே இருந்து வந்த எதிர்ப்பை மீறி அவசர, அவசரமாக அடக்கம் செய்துவிட்டனர். ஆனால் டாக்டரை அடக்கம் செய்யப்பட்டதை அவர் குடும்பத்தினர் கண்களால் பார்க்கவில்லை .

இதனையடுத்து, டாக்டரின் மனைவி இதனை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று எண்ணி தமிழக அரசு, முதல்-அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால் கணவரின் உடல் உரிய மரியாதையோடு எங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது தான் மேலும், வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு, அங்கு எந்த கல்லறையும் கிடையாது.

அங்கு புதைப்பதற்கு பதிலாக உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால் தான் அவர் ஆன்மா சாந்தியடையும். எங்கள் மனமும் ஆறுதல் அடையும் என்று புலம்பலுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, வேலங்காடு மயானத்தில் இருந்து டாக்டர் உடலை உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, முதலாவதாக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதன் வெளியே மரப்பெட்டி வைத்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மற்றும் மரப்பேழையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி அடக்கம் செய்தால், அதில் எந்த தொற்றும் ஒருபோதும் ஏற்படாது என்று டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

    டாக்டர் மனைவி பொது நலத்துடன் உழைத்த என் கணவரை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் கணவரின் ஆன்மாவும் சாந்தியடையும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார் .