சப்த கன்னியர்களுக்கு செய்யப்படும் தாந்திரீக வழிபாடு!தலைவிதியும் மாறும் மகிமை!

மனிதனாக பிறந்த அனைவரது வாழ்விலும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கும்.


குறிப்பாக ஒரு சிலர் தாங்கள் பிறந்த நாள் முதல் தற்போதைய தினம் வரை, வாழ்க்கையில் சந்தோசம் என்பதையே இழந்து, அதே சமயம் பல்வேறு வகையான கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய துன்மங்கள் நீங்க பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். இருப்பினும் சில தாந்த்ரீக பரிகாரங்களையும் அதனுடன் சேர்த்து செய்யும்போது கூடிய விரைவில் நல்ல பலன்களை கொடுக்கும்.

தாந்திரீக வழிபாட்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்வில் அனைத்து சுகங்களையும் அருளுகின்ற தெய்வமான பிராம்மி தேவிக்கு பூஜை செய்து தங்களுக்கு தேவையான பலன்களை தாந்த்ரீக முறைகளை பயில்பவர்கள் பெறுகின்றனர். அப்படியே பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீகர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதியும் மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

உங்கள் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய அளவு தாம்பாளத் தட்டில் மஞ்சள் தூள் கலந்த நீரை ஊற்றி, இரண்டு தீபங்களை ஏற்றி கிழக்குத் திசையை நோக்கி பார்த்தவாறு அந்த தட்டில் வைத்து, சிறிது கற்கண்டுகளை நைவேத்தியமாக வைத்து ஓம் ப்ராம்மியே நமஹ என்கிற மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும்.

இந்த பரிகார வழிப்பாட்டை தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக செய்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மாளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை, வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.

இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும். மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.