பாவம் செய்யாமல் இருக்க ஆசைப்படுகிறீர்களா? இதோ எளிய ஆன்மிக வழி!

நாம் எங்கே இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


நம் உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகளையெல்லாம் அவர் அறிவார், எங்கும் நிறைந்த அவர் நமக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறார் - இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டு மறவாமல் எப்போதும் நினைவில் வைத்திருந்தால், பாவம் செய்பவர்களாக நாம் இருக்க மாட்டோம். 

இறைவன் அருளைத் துணைாயக் கொண்டு வாழ்ந்தால் தான், மனிதன் தீயவற்றிலிருந்து விலகி வாழ முடியும். ஆழமான தெய்வசிந்தனைகள், உள்ளத்தில் தோன்றும தீய சிந்தனைகளை அகற்றும, எனவே நாம் நம் உள்ளத்தை் தூய சிந்தனைகளால் தெய்வ சிந்தனைகளால், புனிதமான சிந்தனைகளால் நிரப்பியபடியே இருக்க வேண்டும். 

மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவனே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் கொண்டவன் தவறு செய்ய மாட்டான். மனிதன் கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது. எதிர்காலத்தை நினைத்து ஏங்கவும் கூடாது. மாறாக, நிகழ்காலத்தில் ஆன்மிகமும் அறமும் பொருந்திய வாழ்க்கை நடத்துவதிலேயே கருத்துச் செலுத்த வேண்டும். 

தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோருமே தவறு செய்கிறோம். பிறகு வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறோம். கருணைக் கடலான, தயாபரனான இறைவனும் நம் குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிகிறான். 

தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மனநிம்மதியுடனும், மனநிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ளபோதே நற்செயல்களைச் செய்து புண்ணிய பலன் களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்கமுடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.