அவன தூக்கணும்..! உன் ஆளங்களை அனுப்பு..! டிக்டாக் சுகந்தி போடும் கொலை ஸ்கெட்ச்..! வெளியான ஆடியோ..! பகீர் தகவல்!

தேனி மாவட்டத்தை சேர்ந்த டிக் டாக் சுகந்தியை ஊர் மக்கள் ஊரை விட்டு வெளியே துரத்தியதால் கடுப்பான சுகந்தி தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் தன்னை ஊரைவிட்டுத் துரத்த காரணமாக இருந்த இருவரை கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டி இருக்கிறார்.


தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை சுகந்தி. இவர் டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார். இவருடைய கணவர் இவரை சொந்த ஊரில் விட்டுவிட்டு பட்டாளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கணவர் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு சுகந்தி தினம்தோறும் மிகவும் கவர்ச்சியான டிக்டாக்க்குகளை செய்து பதிவேற்றுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக சுகந்திக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சுகந்தியை அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போதுகூட சுகந்தி மிக தைரியமாக டிக்டாக்கில் புதிய பதிவை வெளியிட்டு கெத்து காட்டினார். இநிலையில் டிக்டாக்கில் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சுகந்திக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சுகந்தி மற்றும் அவரது ஊரை சேர்ந்த மற்ற பெண்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்து டிக் டாக்கில் வெளியிட்டிருக்கிறார். 

இதுகுறித்து சுகந்தியின் ஊர் மக்களுக்கு தெரிய வரவே மிகவும் கோபம் அடைந்துள்ளனர். சுகந்தியையும் அவரது சகோதரியையும் அடித்து விரட்ட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து நள்ளிரவு என்று கூட பாராமல் மற்றும் அவரது சகோதரி இருவரையும் ஊரைவிட்டு ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இனி அவர்கள் இருவரும் ஊருக்குள்ளேயே வரவே கூடாது என்பதற்காக காவல் நிலையத்திலும் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அவர்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனவும் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சுகந்தி தன்னை ஊரைவிட்டு வெளியே அனுப்ப காரணமாக இருந்த டிப்டாப் நண்பர்கள் இருவரை போட்டு தள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளார் அந்த கொலைகளுக்கு தன்னுடைய புதிய டிக்டாக் நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். இந்த கொலைக்கான திட்டமிடுதலை டிக்டோக் செயலிலேயே பதிவாக வெளியிட்டிருக்கிறார் சுகந்தி.

இதனைப் பார்த்த அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியை இவ்வளவு கேவலமாக பயன்படுத்திக்கொள்ள முடியுமா எனவும் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ போலீசாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் அந்த டிக் டாக் செயலியை தமிழகத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.