ஆபத்தை உணரா அவசரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயிலுக்கு பலி!

இரயில் பாதை கடப்பது குற்றமென சட்டம் இயற்றிய பிறகும் குறைந்தபாடில்லை. சிலர் தண்டவாளத்தை கடக்கும்போது தங்கள் உயிரைக இழக்கின்றனர்.


இதே காரணத்தினால் இன்று அதிகாலை, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இரயிலில் அடிபட்டு இறந்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம்பூர் ரயில் நிலையத்தில் இரயில் பாதையை கடக்க முயன்ற போது அதிவேக இரயிலில் அடிபட்டு மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆம்பூர் மாவட்டத்தில் கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 45. இவர் இவருடைய அக்கா பானுமதி மற்றும் அவரின் 8 வயது பேரனான நித்திஷுடன் சென்னையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உறவினரை காண்பதற்கு இன்று அதிகாலை புறப்பட்டுள்ளனர்.

இரயில் பாதையை கடக்க முயன்ற போது,அதிவேக ரயிலான‌ சென்னை- திருவனந்தபுரம்  இரயிலில் அடிபட்டு சிக்கினர். இந்த இரயில் ஆம்பூர் நிலையத்தில் நிற்காது. ரயிலின் வேகம் அதிகமாக இருந்ததால் 100 மீட்டர்கள் தொலைவில் அவர்கள் பறந்து சென்றுள்ளனர்.

இரயில்வே காவல்துறையினர் பின்னர் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.