அகண்ட தீப வழிபாட்டின் மகிமை தெரியுமா? இது பெரிய தீபம் இல்லைங்க! ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தீர்பம்!

புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களும் கொலு வைப்பது, சக்தியை வழிபடுவது, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி மகிழ்வது என விமரிசையாக நடைபெறும்.


நவராத்திரி விழாவின் போது, தினமும் தேவி மகாத்மியம் பாராயணம் செய்வது நல்லது. சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்து ஜபித்து அம்பிகையை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

வேலை நிமிர்த்தம் காரணமாக எல்லோராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர். நவராத்திரி வழிபாட்டில், மிக முக்கியமானது அகண்ட தீபம் ஆகும்.

அகண்ட தீபம் என்பது அகலமான பாத்திரத்தில் அல்லது விளக்கில் தீபமேற்றி வழிபடுவது அல்ல. அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பதாகும்.

நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம். தேவியை பூஜிக்கும் இடத்தின்; அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம், குங்குமமிட்டு, பூப்போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

ஒரு விளக்கு அகல் விளக்காகவும், மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது. இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும். இதுவே அகண்ட தீபம்.

நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாகத் தருவது, நம் வீட்டில் இன்னும் இன்னும் சுபிட்சங்களை வாரி வழங்கும். சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும்.