தற்கொலை செய்த சித்தார்தாவுக்கு இப்படி ஒரு மறுபக்கமா? கோட்டு போட்ட தாதாவாம்!

மரணம் எல்லாவற்றையும் புனிதமாக்கிவிடும் என்பார்கள். ஆனால், கர்நாடகாவில் தற்கொலை செய்துகொண்ட சித்தார்தா பற்றி, மரணத்துக்குப் பிறகு பல்வேறு எசகுபிசகான செய்திகள் வெளிவருகின்றன. அவர் கோட்டு போட்ட தாதா என்கிறார்கள்.


இது ஒரு முன்னாள் வங்கி அதிகாரி சொல்லும் கருத்து. "நான் 15 வருடத்திற்கு முன் தனியார் வங்கியின் வாராக்கடன் வசூல் செய்யும் துறையின் தலைவராக பணியில் இருந்தபோது, அசல் கடன் 120 கோடி, மற்றும் வட்டி 9 கோடி மற்றும் சித்தார்த்தாவின் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து திரும்ப வந்த 138 காசோலைகள் சார்பாக அளிக்கப்பட்ட சம்மன்களையும் விசாரிக்க 

என் கீழ் பணிபுரியும் 20 அதிகாரிகளை அவரின் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு அனுப்பினேன். அப்போது, அந்த அதிகாரிகள் சித்தார்தாவின் குண்டர்களால் சூழப்பட்டு மிகவும் அச்சுறுத்தப்பட்டனர். இதை தூக்கி சாப்பிடுவது போல சித்தார்த்தா தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியை ஒவ்வொரு அதிகாரியின் முகத்திற்கு நேராக பிடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் அதிகாரிகள் அனைவரும் 30 வயதுடைய இளைஞர்கள்.

அதில் சிலருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. அவர்களை பெரும் போராட்டம் நடத்தி, பெரிய போலீஸ் அதிகாரிகள், சிஆர்பிஎஃப் உதவியோடு மீட்டோம். அந்த கொலை மிரட்டல் வழக்கு இன்னமும் சித்தார்தா மீது நிலுவையில் இருக்கிறது’ என்கிறார். அதேபோன்று, சிக்மங்களூர் மற்றும் கூர்க் காபி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறிய குற்றச்சாட்டு இது.

‘‘சித்தார்த்தா காபி கொட்டைகள் ஏலம் எடுக்கும் கூட்டத்திற்கு லோக்கல் ரவுடிகள், குண்டர்களோடு வந்தாலே மற்ற காபி விற்பனையாளர்கள் பயந்து நடுங்கி ஒதுங்கி கொள்வார்கள். "என்னை பார்த்தாலே உங்களுக்கு முதுகுதண்டுல வேர்க்கணுமே" என கேட்கும் வழக்கம் கொண்டவன் அவன். எத்தனையோ முறை பலவந்தமாக நிறைய காபி விற்பனையாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சம்பவங்கள் உண்டு.

ஒரு தனி காபி மாஃபியா நடத்தி இருக்கிறான் அவன். அவனை இன்று என்னமோ, மிக நேர்மையான வியாபாரி என தூக்கி வைத்து கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். தொழிலில் எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போயி, அதாவது குடும்பத்தை கடத்தி மிரட்டுவது, அடித்து கையெழுத்து வாங்குவது, காஃபி தோட்ட அபகரிப்பு என எந்த லெவலுக்கும் போயிருக்கிறான் இந்த பன்னாடை.

இருபதாயிரம் பேருக்கு வேலை குடுத்தான், இல்லேனு சொல்லல. ஆனா இருபதாயிரம் குடும்பத்தை அடிமையாக்கி வேலை வாங்கி, தான் சுகித்திருக்க ஒரு சில குடும்பத்தின் தலைமுறையைவே அழிச்சிருக்கான் இந்த ரவுடிபய..’’ என்று சொல்கிறார்கள். சித்தார்தாவின் மரணத்தை பல பகுதிகளில் வெடிவெடித்து ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பணம் கோடிகளில் இருப்பதால் மட்டும் நிம்மதியும், சந்தோஷமும் கிடைத்துவிடாது என்பதற்கு உதாரணம் சித்தார்தா.