இதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மதிப்பு கிடையாது.

காலம் காலமாக தி.மு.க.வில் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு அங்கே எந்த மரியாதையும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பதவி என்றால் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மட்டும் செல்லும். நிர்வாகிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் யாரையும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள் என்பது நெல்லையில் தெரியவந்துள்ளது.


திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை அண்மையில் உள்ளூர் பிரச்சனையில் வெட்டி கொல்லப்பட்டார். கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்டிவாக இருந்த இவர், பல லகரங்களை வாரி இறைத்திருக்கிறார். கட்சிக்காக உண்மையாகவே உழைத்தும் இருக்கிறார்.

ஆகவே, செல்லத்துரைக்கு மதிப்பும் மரியாதையும் தரும் வகையில் அவரது, 

இறுதிச் சடங்கில் பங்கேற்க தலைமையிலிருந்து யாராவது வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகிகள் சென்னைக்கு போன் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் உடல் தகனம் செய்யப்படும்வரை ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை.

 ‘’காலம் முழுவதும் கட்சி கட்சிண்ணே இருந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஒருவர் கூட வரல. உழைப்பவர்களுக்கு திமுகவில் கிடைக்கும் உண்மையான மரியாதை இதுதானா?’’ என உறவினர்களும், லோக்கல் கட்சிக்காரர்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில நிர்வாகிகள்தான் வரவில்லை, மாவட்ட நிர்வாகிகளையாவது அனுப்பியிருக்கலாமே என்பதுதான் உடன்பிறப்புகளின் சோகம். என்னத்தைச் சொல்வது.