கொரோனாவை விரட்ட இரவும் பகலும் உழைத்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தையே தாக்கிவிட்டதே இந்த கொரோனா!

தமிழகத்தில் இருந்து கொரோனா தொற்றை விரட்டுவதற்காக இரவும் பகலுமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து போராடி வருகிறார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.


இவர் பொறுப்பு எடுத்துக்கொண்ட பிறகே சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியார் என நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதையடுத்து, ராதாகிருஷ்ணனும் தன்னை தனிமைப்படுத்தியிருக்கிறார்.

லேசாக காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து மாமனார், மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின், மனைவி, மகனுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, உறுதியானது.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராதாகிருஷ்ணன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அனைவரும் நலம் பெற்று வரட்டும்.