திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கு! என்ஐஏ விசாரணையால் திடீர் திருப்பம்!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு துறையினர் அதிரடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.


கடந்த பிப்ரவரி மாதம் 5ந் தேதி திருபுவனம் அருகே மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி ஒரு தரப்புடன் ராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் அணிந்திருந்த குல்லாவை வாங்கி அணிந்து கொண்ட ராமலிங்கம் அவர்களுக்கு விபூதி பூசிவிட்டார்.

இதனை  தொடர்ந்து அன்று இரவே ராமலிங்கம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

பொதுவாக தீவிரவாதம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் என்ஐஏ இந்த வழக்கை கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராமலிங்கம் மனைவி கூறியுள்ளார். இதனிடையே கும்பகோணம் வந்த கேரளாவை சேர்நத் என்ஐஏ அதிகாரிகள் திருபுவனம் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரணை நடத்தினர். 

இந்த வழக்கில் குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த அரசியல் கட்சிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. எனவே என்ஐஏ அதன் அடிப்படையிலேயே விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.