காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
திருமண கோலத்தில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி! பதற வைக்கும் காரணம்!
திருப்பதி அருகே உள்ள மொரவப்பள்ளியை சேர்ந்த தனஞ்செயலு, காளஹஸ்தியை சேர்ந்த பல்லவி ஆகியோர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும், திருமணம் செய்துகொள்வதற்காக, பெற்றோரிடம் சம்மதம் கோரியுள்ளனர். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்பேரில், இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து, திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும், மன வேதனை காரணமாக, தங்களது வாழ்க்கை பற்றி, செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதில், தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை வாக்குமூலமாக அளித்துள்ள அந்த காதல் ஜோடி, இதன்பின் செய்த செயல்தான் உச்சக்கட்ட வேதனை.
ஆம். மிகவும் உருக்கமாக, வீடியோவில் பேசிய அந்த காதல் ஜோடி, சில மணிநேரத்தில், மொரவப்பள்ளி கிராமம் அருகே, ஓடும் ரயில் முன்பாக, திடீரென பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.