அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த திருமா! உண்மையான பின்னணி இதுதான்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அரசியலை விட்டு விலக தயார் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடைப்பெற்று முடிந்த மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்கப்பட்டது. இதனால் சில ஆதரவாளர்கள் பொன்பரப்பியில் பானைச்சின்னத்தை விரைந்தனர். .தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் திமுகவிற்கு ஆதரவளிப்பதால் எனக்காக, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இவ்விரு  காரணங்களால் பாமக கட்சியனர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறினார். தனக்கு உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் கூறினார். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் நலனுக்காக நான் அரசியலிலிருந்து விலக தயார் என்றும் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு பாமக வழக்கறிஞர் பாலு ஒரு பேட்டி அளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பாமகவையும் மோத விட்டு திமுக வேடிக்கை பார்க்கிறது என்றும், மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக எவ்வாறு தலைக்குனிவாக நடத்தியது என்பதை திருமாவளவன் அவர்களே வருந்தி கூறுவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.