திருமண உறவில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவன்களிடம் மறைக்கும் மோசமான ரகசியங்கள் இவைகள் தான்..! என்னென்ன தெரியுமா?

திருமணமான பெண்கள் தங்களது கணவரிடம் இருந்து மறைக்கும் ரகசியங்கள் என்னவென்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


திருமணமான பெண்கள் தங்களுடைய கணவருடன் எவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தாலும் சில ரகசியங்களை எப்போதும் வெளியில் சொல்ல மாட்டார்கள். இதுகுறித்து பெண்களிடையே நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள்  வெளியாகியுள்ளன. 

திருமணமான பெண்கள கணவரிடம் தங்களின் கடந்தகால உறவுகள் பற்றிக் கூறுவது பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாக பெண்கள் கூறியுள்ளனர். தங்களின் கடந்தகால உறவுகளை பற்றி கூறுவதன் மூலம் தங்களுடைய நிகழ்கால வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்கு பிறகு கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் போதிலும் கணவரை தங்களது காதலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதை ஒருபோதும் அவர்கள் தங்களது கணவரிடம் கூற மாட்டார்கள். இது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று நன்றாக தெரிந்த போதிலும் அவர்கள் அதை செய்து கொண்டுதான் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

திருமணமான பெண்களில் பெரும்பாலானோருக்கு தங்களின் மாமியாரோடு பிரச்சனை இருக்கும். என்னதான் பிரச்சனை , கோவம் இருந்தாலும் அதனை தனது கணவரிடம் மறைத்து மகிழ்ச்சியாக இருப்பது போன்று நடித்து வருகிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

திருமணமான பின்பு பெரும்பாலான பெண்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தாங்கள் செய்துவந்த வேலையை விட்டு நின்றுவிடுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் மனதளவில் வருத்தப்பட்டாலும் அதனை தங்களது கணவரிடம் வெளிக்காட்டுவதில்லை.

திருமணமான பெண்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி தங்களது கணவரிடம் பெரும்பாலும் கூறுவதில்லை. ஏனெனில் தங்களது கணவர்கள் அவர்கள் அம்மாவிடம் சொல்லி பின்னால் ஏதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணி தங்களது கணவரிடம் அனைத்தையும் மறைக்கிறார்கள்.

திருமணமாகி கணவனுடன் உடலுறவில் ஈடுபடும் போது குறிப்பிட்ட சதவீதம் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அடைவது இல்லை. தங்களின் உச்சகட்டத்தை பற்றியோ அல்லது கணவரின் பாலியல் திறனை பற்றியோ தங்களது கணவரிடம் பெண்கள் வெளிப்படையாக கூறுவதில்லை எனவும் அந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.