உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் என்று சுந்தர் பிச்சை ஆருடம் கூறியுள்ளார்.
உலக கோப்பை பைனலில் எந்த அணிகள் மோதும்? சுந்தர் பிச்சை தெறி கணிப்பு!
சுந்தர் பிச்சை இந்திய நாட்டிற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் ceo பதவியை வகித்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் மற்றும் பேஸ்பால் விளையாட்டுக்களின் மீது ஆர்வம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று சுந்தர் பிச்சை அவர்கள் இந்திய சம்மேளன மாநாட்டில் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு "க்ளோபல் லீடர்ஷிப் அவார்ட்" (global leadership award) என்கிற உயரிய விருது வழங்கப்பட்டது.
அங்கிருந்த விருந்தினர்களுடன் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் பொறுப்பாளரான USIBC நிறுவனத்தின் தலைவரான நிஷா என்பவர் சுந்தர் பிச்சையிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது "நடப்பு உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் எந்தெந்த அணிகள் மோதும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று கேட்டார்.
அதற்கு அவர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் என்று பதிலளித்தார். இந்திய அணி வெல்வதற்காக பிரார்த்தனை செய்வதாக கூறினார். நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் திறமையானவை என்றும் ஆனால் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் கூறுகையில் அமெரிக்காவிற்கு வந்தபோது எனக்கு பேஸ்பால் விளையாட்டு மிகவும் சிரமமாக இருந்தது. கிரிக்கெட் மற்றும் பேஸ்பால் ஆகிய விளையாட்டுக்களின் தன்மைகள் ஒன்றாக இருப்பினும் பல்வேறு வகையான வித்தியாசங்கள் உள்ளன. பிறந்தநாள் பேஸ்பால் விளையாட்டு முறையில் என்னை மேம்படுத்திக் கொண்டேன் என்று கூறினார்.
இவருடைய ஆருடம் பலிக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.