சிவப்பு..! ஆரஞ்ச்..! பச்சை..! எந்த மண்டலத்திலும் இந்த 11 விஷயத்திற்கு மட்டும் அனுமதி இல்லை..! என்னென்ன தெரியுமா?

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் 11 அம்சங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ள அம்சங்களானது அரசாணையில் வெளிவந்துள்ளது.


நாளையுடன் இந்தியா முழுவதிலும் அறிவிக்கப்பட்டிருந்த 2-வது ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் ஊரடங்குக்குப் பிந்தைய காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

அதன்படி நாட்டின் மாவட்டங்கள் அனைத்தையும் பாதிப்புக்கு ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக மத்திய அரசு வகுத்துள்ளது. மண்டலங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இன்று கூட்டப்பட்ட அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் சென்னை மாநகருக்கு ஒருவகையான முடிவுகளும், பிற மாவட்டங்களுக்கு இன்னொரு வகையான முடிவுகளையும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசானது 3-வது முறையாக ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீடித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள 10 அம்சங்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

1. வழிபாட்டு தலங்கள், மத கூட்டங்கள், பொதுமக்கள் வழிபாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி ஆய்வகங்கள் முதலிய கல்வி சார்ந்த நிறுவனங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3. திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்.

4. அரசியல், விளையாட்டு, சமயம், சமுதாயம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளன.

5. பேருந்து, விமானம், ரயில் போன்ற பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

6. கால்டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றுக்கும் தடை.

7. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு தடை. 

8. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர) அமல்படுத்தப்பட்டிருந்த தடை தொடரும்.

9. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

10. திருமண நிகழ்வுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த அறிவுரைகள் தொடரும்.

மேற்கூறப்பட்டுள்ள 10 அம்சங்களுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்று தமிழக அரசாணையில் வெளியாகியுள்ளது.