இறந்த உடல்களை புதைப்பதற்கு எங்களிடம் இடமில்லை என்று கதறி அழும் இத்தாலி அதிபர்!

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வந்தாலும் முதன் முதலாக சீனாவின் வூகான் எனும் மாநிலத்தில் இந்த வைரஸ் பரவல் தொடங்கியதாக அறியமுடிகிறது.


இந்நிலையில் சீனாவை விட அதிகப்படியான உயிரிழப்பை இத்தாலி சந்தித்து வருகிறது. கடந்த 22ம் தேதி வரையிலும் சுமார் 60 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டும். 5476 பேர் இதுவரையிலும் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸை தாக்குதல் உலகம் முழுவதும் பரவிய வேளையில். மக்கள் தங்களை தனிமையான இடங்களில் பாதுகாத்துக் கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியது. இத்தாலி மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதற்கும், வெளி உலகில் இயக்கவும் ஆரம்பத்தில் தவிர்த்து வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான பேர் தினம் தினம் மரணமடைந்து வருகின்ற இந்த வேலையில்.

இந்த வைரஸ் தாக்குதலைப் பற்றிய முழுமையான தெளிவுடன் தங்களை தனிமைப் படுத்தி வருகின்றனர். இத்தாலி முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளால் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இரட்டை இலக்கங்களை தொட்டுல்லதால், ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அதிபர் மிலனில் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி இத்தாலியில் இறந்தவர்களை புதைக்க உறவினர்கள் கூட யாரும் வரவில்லை எனவும். புதைப்பதற்கு இடமின்றி மருத்துவமனை ஊழியர்கள் அலைவதாகவும் கூறியுள்ளார்.

இத்தாலியின் சோகம் இப்போது அதன் ஐரோப்பிய மற்றும் அண்டை நாடுகளான அமெரிக்காவிற்கும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது , கொரோனா வைரஸ் கடுமையான வேகத்துடன் பரவி வருகிறது. இத்தாலியின் மரண ஓலங்களைக் கண்ட பல நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .

அதிகப்படியான கல்வியறிவு மற்றும் வளர்ந்த மருத்துவம் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ள இத்தாலியில் இவ்வளவு மரண நிகழ்வுகளைக் கண்ட ஆசிய நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன.

மேலும் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில். இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும். நம்மிடம் போதுமான மருத்துவ வசதிகள் மற்றும் நவீன உபகரணங்கள் இல்லாததன் காரணமாக செய்வதறியாது திகைத்து வருகின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள்.

கடந்த 22ஆம் தேதி பொதுமக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கைகள் மூலமாக ஒரு நாள் தனிமைப்படுத்துதலை ஆதரித்தாலும். இனிவரும் காலங்களில் தான் இந்த வைரஸின் தாக்கம் அதிகப்படியாக பரவ வாய்ப்பு உள்ளதால். மத்திய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்திய மக்கள் இருந்து வருகின்றனர்.

மணியன் கலியமூர்த்தி