தி.மு.க.வில் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில் பெரும் போராட்டம் நடக்கிறது..? பாலுக்கும் வேலுக்கும் மோதல்

பேராசிரியர் அன்பழகன் வகித்துவந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்று துரைமுருகன் எத்தனையோ பல்டிகளை அடித்துப் பார்த்துவிட்டார். முடிந்தவரை அந்த பதவி கொடுப்பதை தள்ளீப் போட்டுக்கொண்டே வந்தார்.


இதற்காக துரைமுருகன் முதல்வருடன் பேரம் பேசிய விவகாரம் எல்லாம் வரவே, அவருக்கு வேறு வழியில்லாமல் பொதுச்செயலாளர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

அந்த வகையில், திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ந்தேதி காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளன.

பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில்தான் பெரும் போராட்டம் நடக்கிறது. பொருளாளர் பதவியை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று டி.ஆர்.பாலு, எவ.வேல இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இடையில் , ஆ.ராசாவும் பொருளாளர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார். என்ன நடக்கும் என்று வேடிக்கை பார்க்கலாம்.