உங்கள் வீட்டில் பித்ரு தோஷம் இருக்கிறதா? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

ஒருவர் வீட்டில் பித்ரு தோஷம் இருப்பதை சில செயல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது. பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும். நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும். 

ஒருவரின் வீட்டில் காரணமே இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவாக இருக்கும். வீட்டுக்கு வந்தால் நிம்மதி இருக்காது. வீட்டில் இருக்கும் அழகும் அறிவும் படிப்பும் நல்லொழுக்கமும் நிரம்பிய பிள்ளைகளுக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.  

தொடர்ச்சியாக பழுது பார்த்த பின்னரும் கூட சுவர்களில் இருந்து தண்ணீர் கசிதல். ஒழுகும் சுவற்றில் தான் இறந்த ஆன்மாக்கள் வாழும். வீட்டில் அடிக்கடி சாக்கடை அல்லது தண்ணீர் பிரச்சனை ஏற்படுதல். குழாய்களை பிளம்பரை கொண்டு பல முறை பழுது பார்த்திருந்தாலும் கூட தண்ணீர் ஒழுகக்கூடும். * தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். 

நல்ல குணவதியான பெண்ணிற்கு குடிகார கணவன் அமைவது அல்லது பல வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது, ஒரு சிலருக்கு பலமுறை கரு கலைவது, எவ்வளவு செல்வங்கள் அதிகமாக இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாதபடி சதா நோய்வாய்ப்பட்டு இருப்பது அல்லது அடிக்கடி மருத்துவச் செலவுகள் உண்டாவது,

பெரிய அறுவை சிகிச்சைகள் செய்வது, குடும்பத்தில் அகால மரணங்கள் ஏற்படுவது, குடும்பத்தில் உள்ளவர்களின் ஒரே நேரத்தில் விபத்தில் இறப்பது, அற்ப ஆயுள் உள்ள பிள்ளைகள் பிறப்பது உள்ளிட்டவை பித்ரு தோஷம் அந்தக் குடும்பத்தில் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.