எமதர்மன் கூறிய மரண ரகசியம் இவ்வளவுதான்! அமைதி தேடும் ஆத்மா!

பிறப்பு என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் இறப்பும் இருக்கும்.


நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதையும், என்றாவது ஒரு நாள் மரணத்தை தழுவுவோம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். கால கடிகாரத்தில் (மரணம்), பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, அனைவரும் சரிசமமே. மரணம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், அதனை பற்றிய உரையாடலில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதற்கு காரணம் அனைவருக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே.

மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனுடைய ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை எமதர்மராஜன் கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆன்மாவின் அழிவிற்கும் உடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது. மரணத்திற்கு பிறகு, ஒரு மனிதன் ஜனன மரண சுழற்சியை முடிக்கிறான்.

அப்படியானால் பிரம்ம ரூபம் என அறியப்படும், ஜனன மரண சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான். கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், நாத்திகவாதிகளும் மரணத்திற்கு பிறகு அமைதியை தேடி அலைவார்கள் எனவும் எமதர்மராஜன் கூறியுள்ளார். வெளிப்படையாக கூற வேண்டுமானால், அவர்களின் ஆன்மா அமைதியை தேடி அலையும்.

நமது புராணங்கள், வேதங்கள் அல்லது சாஸ்திரங்கள், ஒருவரை மரணம் நெருங்கிறது என்றால் அது நிச்சயம் ஒருசில அறிகுறிகளை முன்பே வெளிக்காட்டும் என்று சொல்கிறது. அதிலும் ஒவ்வொரு புராணங்களும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படும் என்று சொல்கிறது.

யாரால் துருவ நட்சத்திரங்களைக் காண முடியவில்லையோ, அவர்கள் கூடிய விரைவில் இவ்வுலகை விட்டு செல்லப் போகிறார்கள் என வேத வசனங்கள் கூறுகின்றன.

ஒருவர் சூரியனைக் காணும் போது, அதில் திரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு உருவத்தைக் கண்டால், மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். அதில் இத்தகையவர்கள் 11 மாதங்களில் இறந்துவிடுவார்கள் என்றும் வேத வசனங்கள் கூறுகின்றன.

மணலில் ஒருவர் நடந்து செல்லும் போது, பாத சுவடுகள் முழுமையாகாமல் இருந்தால், அத்தகையவர்கள் 7 மாதங்களில் உலகை விட்டு சென்று விடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாம்.

கழுகு அல்லது காகம் ஒருவரது தலையில் அமர்ந்தாலோ அல்லது உரசினாலோ, துக்க காரியம் நடக்கப் போகிறது என்ற அர்த்தம். அதுவும் அத்தகையவர்கள் 6 மாதத்திற்குள் இறக்க வாய்ப்புள்ளதாம்.

புராணங்களின் படி, ஒருவரது கண்களுக்கு தன்னைச் சுற்றி ஒரு திரிக்கப்பட்ட உருவத்தைக் கண்டால், அவர்கள் 4- மாதங்களில் உலகை விட்டு சென்றுவிடுவார்களாம். எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

மழை வருவதற்கான அறிகுறி ஏதுமின்றி, ஒருவர் மின்னலைக் கண்டால், அவர்கள் 2-3 மாதங்களில் இறந்து விடுவதற்கான வாய்ப்புள்ளதாக வேத வசனங்கள் கூறுகின்றன.

ஒருவரது பாதம் குளித்த உடனேயே வறட்சி அடைந்துவிட்டால், அத்தகையவர்கள் அடுத்த 10 நாட்களில் இறந்துவிடும் வாய்ப்புள்ளதாம். விளக்கு அணையும் போது, அதிலிருந்து வரும் வாசனையை நுகர முடியாவிட்டால், அவர்கள் இவ்வுலகில் இன்னும் சில காலம் மட்டுமே வாழ்வார்களாம்.

முக்கிய உடலுறுப்புகளான வாய், காது, கண் செயலிழக்க ஆரம்பித்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் என சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

சாதரண நிறத்தில் இருக்கும் ஒருவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறிவருகிறது என்றால் அதிலிருந்த ஆறு மாதங்களில் அவரின் இறப்பு நிகழும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு மனிதனுக்கு தன் இடது கை பயத்தின் காரணமாக தொடர்ந்து விடாமல் நடுங்கினால் அந்த மனிதரானவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் என சிவ புராணம் சொல்கிறது.

முக்கியமாக ஒருவரால் நெருப்பை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர் வீட்டு வாசல் கதவை எமன் தட்ட போகிறான் என சிவபுராணம் சொல்கிறது. ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.