ஆடைகள் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை கேட்டான்..! நான் அனுப்பியதும் அவன் செய்த செயல்.! காதலிக்கு காதலனால் நேர்ந்த திகில் அனுபவம்!

விழுப்புரம் அருகே காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட செல்போன் கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த செயலை துணிச்சல் உடன் செயல் பட்ட அந்த பெண்ணை பாராட்டி உள்ளனர் அனைவரும். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஆலம்பாடி புதுக்காலனியை சேர்ந்தவர் கலையரசன். இவர் கடலூர் நத்தவெளியில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடையில் 22 வயது இளம்பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்தார்.அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் அது காதலாக மாறியது. அவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதற்கிடையில், கலையரசன் தனது காதலியை தனது அக்காள் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் அந்த பெண்ணை அழைத்து சென்று இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளார்கள். பின்னர் சில நேரத்தில் வெளிவூர் செல்வது வழக்கம். 

இந்நிலையில், அவர்கள் 2 பேரும் திருப்பூர் சென்று அங்கு ஒரு பனியன் கம்பெனியில் வேலையில் சேர்ந்தனர். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கலையரசன் தனது காதலியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நீ உன்னுடைய நிர்வாண படத்தை எனக்கு செல்போனில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்பேரில் அவரும் தன்னுடைய நிர்வாண படத்தை கலையரசனுக்கு அந்த பெண் அனுப்பினார்.

தொடர்ந்து கலையரசன் தனது காதலியிடம் மேலும் நிர்வாண படங்களை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் கலையரசனை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், பேஸ்புக்கில் அந்த இளம்பெண்ணின் நிர்வாண படங்களை பதிவு செய்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். மற்ற பெண்கள் போன்று அழுது மூலையில் முடங்கமல், தற்கொலைக்கு முயற்சி செய்யமால், தையிரியமாக இது தொடர்பாக கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காதலியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்த கலையரசனை கைது செய்தனர்.

அதன் பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கலையரசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த செயலை மிகவும் துணிச்சலுடன் செயல்பட்ட அந்த பெண்ணை அனைவரும் பாராட்டுவும் செய்தனர். மேலும், ஒருவரை காதலிக்கும் முன்பு அவரை பற்றி முழு கவனம் தேவை என்பதை அறிவுரையும் கூறினார்கள் காவல்துறையினர்.