திருநங்கையின் கணவன் திருநம்பி செய்த செயல்! வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி!

திருநெல்வேலி: சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற திருநம்பிக்கு பொதுமக்கள் அடி உதை கொடுத்தனர்.


ஆணாக பிறந்து ஹார்மோன் பிரச்னையால் பெண்ணாக மாறுபவர்களை திருநங்கை என்றும்,இதேபோல பெண்ணாக பிறந்து பிற்காலத்தில் ஆணாக மாறுபவர்களை திருநம்பி என்றும் அழைக்கிறோம். இதன்படி,திருநெல்வேலியில் திருநம்பி ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்ய முயன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், பிரசவம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை, கணவர் உடன் இருந்து பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில், இவர்களின் மூத்த மகள், மகன் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சிறுமியும், சிறுவனும் தங்களது தாயின் உடன்பிறந்தவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அந்த நபர் ஒரு திருநங்கை எனக் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, அவர் மற்றொரு திருநம்பியை திருமணம் செய்துகொண்டுள்ளதும், சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயம். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமியை உறவினரின் குழந்தை என்றும் பாராமல், அந்த திருநங்கையின் கணவரான திருநம்பி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எனினும், இதுபற்றி அந்த சிறுமி கூச்சலிட்டு சத்தம் போடவே அனைவருக்கும் உண்மை தெரிந்துவிட்டது. உடனடியாக, அந்த திருநம்பியை பிடித்து உதைத்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, விசாரிக்கின்றனர். சம்பவம் நிகழ்ந்தபோது, சிறுமியின் சித்தி (திருநங்கை) மற்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்கிறார். அவர் வீடு திரும்பிய பிறகே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அவரும், மற்ற பொதுமக்களுடன் சேர்ந்து தனது கணவரை (திருநம்பியை) அடித்தது குறிப்பிடத்தக்கது.