கொரோனாவில் இருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை.. அடுத்தகட்டமாக பன்றிக் காய்ச்சலுமா ..?

சீனாவில் உருவான கொரோனா தொற்றில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல், உலகமே தவித்துவரும் நேரத்தில், சீனாவில் இருந்து அடுத்தகட்டமாக பன்றிக் காய்ச்சல் பரவ தயாராக இருப்பதாக செய்தி கிடைத்துள்ளது.


இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். சீனாவில் உள்ள பன்றிகளுக்கு அடிக்கடி ஏற்படும் வைரஸ் காய்ச்சல், இப்போது வீரியம் அடைந்ததுள்ளது. அதனால் இது எளிதில் மனிதர்கலுக்குப் பரவும், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் என்று சீன மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

இந்த பன்றி காய்ச்சல் வைரஸ் என்பது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது என்றும் தெரிவிக்கிறார்கள். எந்த நேரமும் பன்றிக் காய்ச்சலும் உலகம் சுற்றி வரலாம் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதுதான்.