அமெரிக்காவை வென்ற அதே தந்திரம்..! கொரோனாவை விரட்டி அடித்த குட்டி நாடு வியட்னாம்..! எப்படி தெரியுமா?

உலகமே கொரனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அதை அசால்ட்டாக விரட்டியடித்து தன்னுடையை இயல்பு வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கிறது வியட்நாம்.


கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் வியட்நாம் உலகிற்கே எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. கொரனா கடந்த பிப்ரவரி மாதம் பரவிய நிலையில், 160 பேர் வியட்நாமிலும் பாதிக்கப்பட்டனர். ஆசியாவில் மிக மோசமான பண மதிப்பை கொண்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று. ஆசிய நாடுகளில் மிக மோசமான மருத்துவவசதி கொண்ட நாடுதான் வியட்நாம். ஜனவரி தொடக்கத்தில் தாய்லாந்து மற்றும் சீன பயணிகள் மூலம் வியட்நாமிற்குள் கொரோனா வந்தது.

இதனால் வேகமாக களமிறங்கிய வியட்நாம் அரசு நாடு முழுக்க தடைகளை விதித்தது. தங்கள் நாட்டு எல்லையை மொத்தமாக மூடியது. அந்த நாட்டிற்குள் வேறு யாரும் நுழைய முடியவில்லை. எல்லைகளை மூடி தங்கள் நாட்டிற்குள் கடுமையான கட்டுப்பாடுகளை வியட்நாம் விதித்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதி, தொழில்நுட்ப வசதி இல்லை. 21 நாட்கள் தொடர்ச்சியாக முக்கியமான மாகாணங்கள் மூடப்பட்டது.

மக்களுக்குதேவையான அடிப்படை பொருட்கள் வீட்டிற்கே சென்றது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்க 1.1 பில்லியன் டாலரை அந்நாட்டு சந்தைக்குள் இறக்க முடிவு செய்துள்ளது. வியட்நாம் மக்கள் வீட்டில் இருந்தே பணிகளை செய்தனர். வியட்நாமில் ஒருவருக்கு கொரோனா இருந்தால், அவர் தொடர்பு கொண்ட நபர், அந்த நபரை தொடர்பு கொண்ட இன்னொரு நபர் , அவருடைய நண்பர், அந்த நண்பரின் நண்பர் என்று வரிசையாக 5 அடுக்கு காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது.

ஐந்தடுக்கு சோதனை செய்வதற்காக அந்நாட்டு அரசு ராணுவத்தை பயன்படுத்தியது. 8 ஆயிரம் பேர் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டார்கள். எல்லோரையும் சேர்த்து 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 90 பேர் குணம் அடைந்தனர். 50 பேர் குணமடையும் நிலையில் உள்ளனர். 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா மூலம் வியட்நாமில் ஒருவர் கூட பலியாகவில்லை. புதிதாக யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை.