மாங்கல்ய பாக்கியம் பலமாக இருக்கிறதா என்பதை எப்படி பார்க்க வேண்டும்? இதோ சிம்பிளான வழி

ஒரு ஆண் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும்.


8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அதுபோல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.

இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லது கிடையாது. இதேபோல், ஒரு ஆணிற்கும் 8-ஆம் இடத்தில் மேற்கூறிய கிரகங்கள் இருந்தால் கெடுதல் தான். ஆனால், 8 ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்களும் அந்த இடத்தினை சொந்த வீடாக கொண்டிருந்தால் தோஷம் குறையும்.

அதே போல், அந்த இடத்தில், குரு, சுக்கிரன், பார்வை இருந்தால் தோஷமானது விலகும். இந்த தோஷமானது திருமணம் செய்யப் போகும் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தால், இவர்களின் வாழ்க்கையில் இருவருக்கும் பிரிவு என்பதே இல்லாமல் இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள்.

எனவே ஆண்களின் ஆயுளை அதிகரிக்கக்கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.