கோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

புனிதமான இடத்தில் ஏன் இத்தகைய சிற்பங்கள் என பலரும் யோசித்திருப்பீர்கள்.


மத்திய பிரதேசம் சத்தார்பூரில் அமைந்துள்ள கஜுராஹோ கோயில் காம கோயில் என அழைக்கப்படுகின்றது. இதில் பல்வேறு காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் காம கோயில் என இந்தியர்கள் மட்டுமில்லாமல், வெளிநாட்டினரும் அழைக்கின்றனர்.

முன்னோர்களின் செயல் அனைத்திலும் சிறந்த பின்னனி காரணங்களோடு தான் உள்ளன.

இந்த காலத்தை போல அந்த காலத்தில், காமத்தை பற்றி யாரிடமும் வெளிப்படையாக பேசவும் முடியாது அதே சமயம் அதை பற்றிய நுணுக்கங்களை அறிவதற்கான எந்த அறிவியல் தொழில் நுட்பமும் கிடையாது. அப்படி இருக்கையில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ காமத்தை பற்றி அறிய வேண்டும் என்றால் இது போன்ற சிற்பங்கள் வழியாக தான் அறிய முடியும். இதனால் தான் அக்காலத்தில் புதுமண தம்பதிகளை கோவில் குளங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். காமம் போன்ற வாழ்வியல் முறைகளை பற்றி மறைமுகமாக விலகும் ஒரு ஆசானாகவே அந்த சிற்பத்தை பார்க்க வேண்டுமே தவிர அதை காமமாக பார்க்க கூடாது

அதோடு வெறும் காமத்தை சொல்லித்தரும் சிற்பங்கள் மட்டுமா கோவில்களில் உள்ளது? கூடவே யோகியரும்,முனிவர்களும், உழவர்களும்,குறவர்களும்,அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாகதேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும்,அரசர்களும் என பலரின் சிற்பமும் அல்லவா கோவில்களில் உள்ளது.

இது போன்ற சிலைகள் எல்லாம் கோபுரத்தின் கீழ் நிலையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அதனால் கோபுரத்தில் இருக்கும் இது போன்ற சிலைகள் மீதான பார்வையை தாண்டி யாருடைய பார்வை கோபுரத்தின் உச்சிக்கு செல்கின்றதோ, அவர் மேன்மை அடைவார் என்று கூறப்படுகின்றது.

வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கின்றது. இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம். “நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய்என்பதை போதிக்கிறது.