எங்களை விட்டுட்டு போய்டீங்களே..! சவப்பெட்டியில் படுத்திருந்தவரை பார்த்து கதறிய உறவுகள்! ஆனால் பின்னால் உயிருடன் வந்து நின்ற அந்த நபர்! அதிர்ச்சி சம்பவம்!

தாய்லாந்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் சவப்பெட்டியில் வைத்து இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருக்கும்போது உயிரிழந்ததாக எண்ணப்பட்ட அவர் அந்த இடத்திற்கு வந்ததைக் கண்ட அங்கிருந்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.


வடக்கு தாய்லாந்தை சேர்ந்தவர் பிரபட் சனிக்ட்னம் . அவரது தந்தையுடன் வசித்து வந்த இவர் ரயில் மோதி இறந்து விட்டதாக கூறப்பட்டது. அவரது உடல் சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட இறுதிச் சடங்குக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் துக்கத்தில் அழுது கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இறந்ததாக கூறப்படும் பிரபட் அங்கு நடந்த வந்து அவரது குடும்பத்தார் தோளில் கை வைத்தார். 

பிரபட்டை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்ததாக என்னப்பட்ட பிரபட் உயிருடன் வந்ததால் சவப்பெட்டியில் இருப்பது யாரின் உடல் இன்று அங்கிருந்த அனைவருக்கும் கேள்வி எழுந்தது. இதை எடுத்து சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட பிரபட் அழுக்கு உடையுடன் வீட்டில் அருகே உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதே தண்டவாளத்தில் அவரைப் போன்ற ஒரு நபர் நடந்து சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் அந்த பக்கம் வந்த ரயில் அவர் மீது மோதியது. 

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த அவரும் பிரபட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உருவ அமைப்பை கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் உயிரிழந்தது பிரபட் என்று தவறாக எண்ணி வேறு ஒருவரின் உடலை வைத்து அவருக்கு இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

பிறகு போலீசார் உண்மையில் உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு தகவலைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.