சோம்புக்கு இன்னொரு பெயர் வெண் சீரகமா.. சித்தர் மருத்துவத்திலும் சோம்புக்கு தனியிடம் உண்டு!!

ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுடன் சேர்த்து சோம்பு வைப்பதை பார்த்திருப்பீர்கள். எப்படிப்பட்ட உணவு சாப்பிட்டாலும் அதனை சீரணிக்கவைக்கும் சக்தி சோம்புக்கு உண்டு என்பதால்தான் இப்படியொரு நடைமுறையை கடைபிடிக்கிறார்கள்.


சோம்புவை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்றும் அழைப்பார்கள். பூண்டு வகையைச் சேர்ந்த சோம்பு இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. சித்தர் மருத்துவத்திலும் சோம்புக்கு தனியிடம் உண்டு.

• வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகளுக்கு சோம்பு சிறந்த முறையில் செயலாற்றுகிறது.

• சோம்புவை வறுத்து பொடிசெய்து சுடுநீரில் போட்டு குடித்துவர் நாட்பட்ட இளைப்பு, இருமல் போன்றவை மட்டுப்படும்.

• காய்ச்சல், குளிர் ஜுரம் இருக்கும்போது தண்ணீரில் சோம்பு போட்டு கொதிக்கவைத்து குடிப்பது பலன் தரும்.

• உடல் மெலிவு பிரச்னை இருப்பவர்கள் தினமும் சோம்பு மென்று தின்றால், நன்கு பசியெடுக்கும். போதிய அளவு சாப்பிட்டு உடல் புஷ்டி அடையமுடியும்.

வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் சோம்பு மென்று தின்பது நல்லது. கொழுப்பை குறைக்கும் தன்மை சோம்புக்கு உண்டு என்பதால் உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு தரும்.