கல்லூரியில் சேர்ந்த மறுநாளே தலித் மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்! தவித்தவருக்கு உடனே உதவிய ஆட்சியர்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

முடிந்தவரை ஓடுவோம்! முடியாவிட்டால் நடப்போம்!! நடக்கமுடியாவிட்டாலும்* உட்கார்ந்து கொண்டு.. இயன்றதை செய்வோம்.


இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ள வாட்ஸ்ஆப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது

பாண்டிச்சேரி அருகில் உள்ள ஓதியூர் கிராமத்தை சேர்ந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த செல்வி.BSC. Botany தாவரவியல் இரண்டாம் ஆண்டு குயின்மேரி கல்லூரியில் படித்து வருகிறார்.

ஜூன் மாதம் கல்லூரி திறந்த உடனே குயின்மேரி கல்லூரிக்கு வந்தவர் தங்குவதற்கு அரசு வெலிங்டன் மாணவியர் விடுதிக்கும் விண்ணப்பித்தார். முதல் லிஸ்டுலேயே விடுதியும் கிடைத்தது.

ஆனால் விதியோடு சதியும் விலையாடியதால் விசக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். விடுதி கிடைத்தும் விடுதியில் உரிய ஆவணங்கள் எதுவும் சமர்பிக்காததால் இவரது இடத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவிகளுக்கு அந்த இடத்தை வழங்கிவிட்டார் விடுதி காப்பாளர். அதுதான் நடைமுறை.

ஒரு நாளைக்கு ரூ 300 வீதம் பேருந்து கட்டணம் செலவு செய்து கல்லூரிக்கு வருவதற்கு நான்கு மணிநேரம் வீட்டிற்கு செல்வதற்கு நான்கு மணிநேரம் என்று கல்லூரிக்கு வந்து காலத்தை கடத்தி வந்தார்.

குடும்ப பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து பயணம் என்று சிரமப்பட்டு வந்த அந்த பெண்ணின் நிலையை எண்ணி அவரின் தகப்பனார் வேறொருவர் மூலமாக எனது எண்ணிற்கு என்னை தொடர்புகொண்டு உதவிட கேட்டார். கடந்த 30.07.2019 அன்றோடு விடுதி அட்மிஸன் முடிந்து விட்டது.

என்ன செய்வதென்றெ புரியாமல் மீண்டும் கடந்த 18.09.2019 அன்று வெலிங்டன் விடுதி காப்பாளரை சென்று பார்த்தேன்... முடிந்துவிட்டது என்று கைவிரித்தார். சென்னை கலெக்டர் ஆபிஸ் சென்று உயரதிகாரிகளை பார்த்தேன் முடிந்து விட்டது என்று கைவிரித்தார்... மணம் தளரவில்லை... இன்னும் இரண்டு வழி இருக்கிறது... என்று காத்திருந்தேன்.

ஒன்று சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவிட கேட்பது... அல்லது அவரும் விடுதி எல்லாம் முடிந்து விட்டது வேறு எங்கேயாவது தங்கி படியுங்கள் என்று கைவிரித்தால் கடைசி ஆயுதமாக நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடுவது என்று முடிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்து பார்க்க சென்றேன்.

ஆனால் அங்குள்ளவர்கள் கலெக்டரை பார்க்க முடியாது... கலெக்டர் மேடம் அவசரமா மீட்டிங் செல்கிறார் என்று புறக்கணித்தார்கள்...! உதவியாளர்கள். இது என்ன புது சம்பவமா? வெயிலில் காத்திருந்தேன். திருமிகு மாவட்ட ஆட்சியர் வெளியில் வந்தார் தடைகளை தாண்டி அம்மா அவர்களை சந்தித்து உதவிட கோரினேன்... பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மனுவை பெற்றுக்கொண்டார்.

மீண்டும் இன்று சென்று மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து உதவிட கோரினோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் மனுவை அன்றே விடுதி சம்பந்தப்பட்ட டெப்புட்டி. கலெக்டர் பார்வைக்கு அன்றைக்கே பரிந்துரைத்து அனுப்பி இருப்பதை அம்மா அவர்கள் சொன்னார்.

மேலும் இது சம்பந்தமாக துணை ஆட்சியர் உயர்திரு. ரவி சார் அவர்களை பார்த்து சொன்னேன். அய்யா அவர்கள் விரைவான நடவடிக்கை எடுத்து இன்று 20.09.2019 சென்னையில் உள்ள விடுதிகளில் எங்கு காலியாக இருக்கிறது என்று ஆய்வு செய்து கலெக்டரின் உத்தரவை நடைமுறைப்படுத்த சைதாப்பேட்டை அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மகளிர் விடுதியில் இடமளித்து உதவினார்கள்.

இதை படிக்கும் மாணவ, மாணவிகள் இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் எங்கும் எதிலும் எப்போதும் முன்கூட்டியே எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருந்து முந்திக்கொள்ள வேண்டும். அதேவிதத்தில் தோல்வியைக் கண்டு ஒருபோதும் கவலைப்படக்கூடாது... மணம் தளரக்கூடாது! தொடந்து முயற்சித்தால் வெற்றி நிட்ச்சயம் என்பதற்கு இதுவே ஒரு சான்று.

ஏழை பெண்ணுக்கு உதவிய உயர்திரு. சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உயர்திரு. ரவி சார் அவர்கள் துணை ஆட்சியர் இதற்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு உதவிய வெலிங்டன் விடுதி காப்பாளர் திருமதி.லதா அம்மையார் அவர்களுக்கும் எங்கள் மணம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.