குறைமாதக் குழந்தையால் தாய்க்கும் பாதிப்பு உண்டாகும்

குறைமாதக் குழந்தைகளுக்கு ஏராளமான நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று பார்த்திருக்கிறோம். குழந்தைகளுக்கு ஏற்படுவதைப் போன்றே, குறைமாதத்தில் குழந்தை பெறும் தாயும் பாதிப்புக்கு ஆளாகிறாள் என்பதுதான் உண்மை.


·         எதிர்பார்க்கும் நாளுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுக்கவேண்டிய சூழல் ஏற்படுவதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவஸ்தைக்கும் அதிர்ச்சிக்கும் தாய் ஆளாவதற்கு வாய்ப்பு உண்டு.

·         பிறந்த குழந்தை மீது காட்டும் அன்பு, அக்கறையை கணவன் மற்றும் உறவினர்கள் தன்னிடம் காட்டுவதில்லை என்பதும் தாயை பாதிக்கிறது.

·         குறைமாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உண்டாகும் தாமதம், சிக்கல் தாயின் மனதை ரொம்பவே பாதிக்கிறது.

·         தன்னுடைய கைகளில் இல்லாமல் நியோடனல் யூனிட்டில் குழந்தை இருப்பதால் தாய் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகிறாள்.

இந்த நேரத்தில் தாய்க்கு கனிவான அன்பும், முழுமையான ஆதரவும் தேவை. குறிப்பாக கணவனிடம் இருந்து போதிய அரவணைப்பு கிடைக்கவேண்டும். அதோடு சத்தான உணவும் போதிய ஓய்வும் கிடைத்தால் மட்டுமே, பெண்ணால் இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவரமுடியும்.