20 வயதில் கணவனை இழந்த மருமகளுக்கு மாமியரே மறுமணம் செய்து வைத்த அதிசய சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
20 வயதிலேயே விதவை! தனிமையில் தவித்த இளம் மனைவி! மாமியார் செய்த நெகிழ வைக்கும் சம்பவம்!

ராஜஸ்தான் மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தை சேர்ந்த பிரதிமான என்பவரின் மகன் ரஷ்மிரஞ்சனுக்கும் லில்லி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது.
ஜூலை மாதம் நிலக்கரி சுரங்க விபத்தில் ரஷ்மிரஞ்சன் அகால மரணம் அடைந்தார். திருமணம் ஒரு சில மாதத்திலேயே கணவர் இறந்ததை அடுத்து லில்லி தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இதைப் பார்த்து மனவேதனை அடைந்த மாமியார் பிரதிமா லில்லிக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவரது மனம் ஏற்கவில்லை. இதையடுத்து மருமகளை மகளாக எண்ணிய மாமியார் அவருக்கு மற்றொரு வாழ்க்கையை ஏற்படுத்தி தர முன்வந்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம் தல்சர் பகுதியில் உள்ள ஜகந்நாத் கோயிலில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து மாமியார் கூறும்போது திரும்பி வராத என் மகனுக்காக காலம் முழுவதும் மருமகள் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. இளம் வயது மருமகளின் துயரம் என்ன என்று எனக்கு தெரியும். எனவேதான் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்.
லில்லியை திருமணம் செய்து கொண்ட சங்கிராம் கூறுகையில் இந்த திருமணத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சம்மதம் என்றும் நான் லில்லியுடன் கண்டிப்பாக சந்தோஷமாக வாழ்வேன் என்றும் தெரிவித்தார்.
கணவனை இழந்தால் மகளுக்கே திருமணம் செய்து வைக்க தயங்கும் தாய்மார்கள் மத்தியில் மருமகளை மகளாக பாவித்த இந்த மாமியாரும் ஒரு தாய்தான்.