சுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள்! பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

அதிமுகவினர் வைத்த பேனர் காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பணி கிடைத்து விரைவில் கனடா செல்வதாக இருந்தது. இது தொடர்பான வேலையை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் தனது வீட்டை நோக்கி சுபஸ்ரீ சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் கட்டப்பட்டிருந்த அதிமுகவின் பேனர் ஒன்று கழன்று டுவீலரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது மோதியது. இதனால் தடுமாறிய சுபஸ்ரீ அப்படியே சாலையில் விழுந்தார். இந்த தருணத்தில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது- சிலரோ அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகே உயிரிழந்தார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் பேனர் காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீ மீது விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.