தி.மு.க.வில் இருந்து யாரும் வெளியே போகவே மாட்டார்கள் என்று அறிவித்தது ஒரு காலம். இப்போது வாரத்துக்கு ஒருவர் இடம் மாறிக்கொண்டு இருக்கிறார். கு.க.செல்வம் திசை மாறியது மட்டுமின்றி தி.மு.க.வை போட்டுத் தாக்கியதுதான் பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தி.மு.க.வில் குடும்ப அரசியலே நடக்கிறது என்று கு.க.செல்வம் சொன்ன விவகாரம் வைரலாகியுள்ளது! டென்ஷனில் தி.மு.க.
தி.மு.க.வில் வாரிசு அரசியலாக மாறி விட்டது. தற்போது குடும்ப அரசியலே நடக்கிறது என்று செல்வம் சொன்ன விவகாரம் சீரியஸாக வைரலாகியுள்ளது. ஏற்கெனவே ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோர் குடும்பத்தில் முழுநேர அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வாரிசு அரசியலைத் தாண்டி குடும்ப அரசியலாக மாறிவிட்டது என்ற விவகாரம்தான் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஏனென்றால், இப்போது ஸ்டாலினுக்குத் தெரியாமல் துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோரே கட்சியில் முக்கியமான முடிவுகள் எடுக்கிறார்களாம். இதைத்தான் குறிப்பிட்டு செல்வம் பேசியதாக சொல்லப்படுகிறது.
மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி தி.மு.க.வில் வாய்ப்பு இல்லை, அதனால் எல்லோரும் வெளியே வாருங்கள் என்று அழைத்திருக்கும் விவகாரம் தி.மு.க. சீனியர்களை யோசிக்க வைத்திருக்கிறதாம்.
ஆனாலும், கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கமுடியாமல் தவித்து வருகிறார் ஸ்டாலின். ஏனென்றால், கட்சியில் இருந்து நீக்கிவிட்டால், அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. போன்று செயலாற்றத் தொடங்கிவிடுவார் என்பதுதான் காரணமாம். அடுத்து மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தாவ தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ள விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.