எடப்பாடி ஆட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகிறது! தோலுரிக்கச் சொல்லிட்டார் ஸ்டாலின்!

தி.மு.க.வின் பொதுக்குழு முடிந்ததும், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தி, அ.தி.மு.க.வின் லீலைகளை அம்பலப்படுத்த உத்தரவு போட்டிருக்கிறார் ஸ்டாலின்.


நேற்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லுமளவுக்கு, பகல் கொள்ளை, உளுத்துப் போன ஊழல்,- எதற்கும் லஞ்சம் -எங்கும் கமிஷன் என்று,

அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அதிமுக அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) கழக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானங்களில் குறிப்பாக , பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க., ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி, ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க. அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு, உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசு,

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அதிமுக அரசு ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப் பதியும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்றும், தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணை பிரசாரம் செய்யவேண்டும் என்றும் கழக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் தீர்மானித்திருக்கிறதாம்.

ஸ்டாலின் சொல்லிட்டா செஞ்சிட வேண்டியதுதான் என்று மா.செ.க்கள் கிளம்பியிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.