சிக்கன் ஃப்ரைட் ரைஸ் விவகாரத்திற்கெல்லாம் அமித்ஷா பஞ்சாயத்து செய்வாரா..? கேவலப்படுத்தும் பா.ஜ.க.

தி.மு.க.வுடன் போட்டிபோட்டு பொது இடங்களில் வம்பிழுக்கும் வேலைகளை பா.ஜ.க.வும் பார்க்கத் தொடங்கிவிட்டது. பக்கத்துவீட்டில் சிறுநீர் கழித்து அவமானப்பட்ட பா.ஜ.க. இப்போது சிக்கன் ரைஸ் விவகாரத்தில் சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது.


சென்னை, திருவல்லிக்கேணியில் நடந்த விவகாரம் இது. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பா.ஜக. பிரமுகரிடம் அதற்கு பணம் கேட்டுள்ளார் ஹோட்டல் கடைக்காரர். உடனே, ‘பணம் கொடுக்க முடியாது. நீ முஸ்லீமா இருக்கிற. ஆயிரம் பேரைக் கூட்டிட்டு வந்து மதக்கலவரத்தை உருவாக்கிவிடுவேன் என்றெல்லாம் மிரட்டுகிறார்.

அதுவெல்லாம் போதாது என்று, இப்படி வம்பு வளர்த்துக்கொண்டு இருந்தால், நான் அமித்ஷாவின் "பி ஏ வை கூப்பிடுவேன் என்று தெனாவெட்டாகச் சொல்கிறார். இந்த விவகாரத்தில் நடப்பதை எல்லாம் போலீஸ் வேடிக்கை பார்ப்பதுதான்.

இதுவே, சாதாரண குடிமகன் குடித்துவிட்டுப் பேசினால் சும்மா இருப்பார்களா..? முட்டிக்கு முட்டி தட்டி கை, காலை உடைத்திருக்க மாட்டார்களா..? பா.ஜ.க. பிரமுகர் என்றால் கொம்பு முளைத்திருக்கிறதா என்பதுதான் மக்களின் கேள்வி.

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகாராறை மனதில் கொண்டு பிடிக்காத பெண்மணியின் வீட்டு வாசலில் மூத்திரம் அடிக்கிறான் முதிர்ந்த டாக்டர்...அவன் பிஜேபியின் மாணவர் அமைப்பின் அகிலபாரத தலைவராம்.... ஹைகோர்ட் ஆர்டரை மதியுங்கள் என்று கெஞ்சும் காவல்துறை துணை ஆணையாளரைப்பார்த்து "ஹைகோர்ட்டாவது மயிராவது" என்று பொது வெளியில் பொளந்துகட்டி ஆட்டமாய் ஆடுபவன் பிஜேபியின் தேசிய செயலாளர் ஆடிட்டருக்கு படித்த ஆடிட்டார் ஹெச் ராஜா.....

நாம் தெய்வஸ்வரூபமாய் வணங்கும் முருகப்பெருமானின் வேலை வீடு கூட்டும் மாப்பிலும் ஒட்டடைக்குச்சியிலும் அட்டையில் செய்த வேலை கட்டி ஊருக்கே காட்டி எம்பெருமான்முருகனை காப்பாற்றப்பிறந்தவராக எல் முருகனை காட்டி யாத்திரையாய் வரவைத்து. இந்தியாவில் உள்ள ஹிந்துகுருமார்கள் அனைவரையும் வேதனைப்படவைத்து வெட்கப்படவைத்த வீணர்கள் கட்சி பாஜக..

தாமரை தமிழகத்தில் மலருமா என்ன..?