அடேங்கப்பா! சமந்தாவோட "அது" இவ்ளோ காஸ்ட்லியா?

சமந்தா அக்கினேனி அணிந்திருக்கும் காலணியின் விலை ஒரு லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் சமந்தா. இவர் தனது உடற்கட்டுக்கு ஏற்றவாறு உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடிப்பவர். சினிமாவானாலும் சரி, சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் ஆனாலும் சரி, இவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் உள்ளது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெருத்த வரவேற்பு உண்டு.

அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு நிற உடையுடன் அட்டகாசமாக காட்சியளிக்கிறார் சமந்தா. ஆனால் இந்த புகைப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம் சமந்தா அணிந்துள்ள காலணி தான்.

ஹை ஹீல்ஸ் ரக கருப்பு நிற காலணியை சமந்தா அணிந்துள்ளார். அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் என்று தெரியவந்து உள்ளது. இதைக் கேட்ட அனைவருக்கும் தலை சுற்றுவதில் ஆச்சரியமில்லை.

இந்தப் பணத்தில் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்று விட்டு பின்னர் மீண்டும் திரும்பி மும்பை வந்து சேர்ந்துவிடலாம். தற்போது சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் மகா என்கிற படத்தில் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.