குழந்தை செல்வம் இல்லையா? உங்க வீட்டு வாஸ்துவில் இந்தக் குறை இருக்கிறதா என்று பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்!

குழந்தை செல்வமே ஒருவருடைய வாழ்க்கையை முழுமை பெற செய்வதாகும்


திருமணமான ஒவ்வொரு ஒரு ஆணும் பெண்ணும் அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். இதற்கு மட்டும் ஏழை பணக்காரர் என்கிற பேதம் கிடையாது. ஆக தனக்கென ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அவரவர் சக்திக்கேற்ப குழந்தையை நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தனக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.

ஜோதிட ரீதியாக நாம் ஆராய்கின்ற போது யாருக்கு சிறப்பாக குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை பாக்கியத்தில் யாருக்கு தடை உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக ஒருவரின் 5ம் பாவமானது பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.

அதுவும் குழந்தை பாக்கியத்தை தரும் காரகன் குரு பகவான் எக்காரணம் கொண்டும் அகத்திற்கு எதிரான பாவங்களான 4ம் 6 ஆம்,8ஆம்,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது. அப்படி தொடர்பு கொள்ளும் போது அதன் எதிரிடை பாவங்களை செயல்பட வைத்து குழந்தை பேறுக்கு வழிவகுக்க வேண்டும்.

ஜோதிட ரீதியாக புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும்.அவர் 4,8.12 பாவங்களின் உப நட்சத்திர அதிபதியாக வரக்கூடாது. அப்படி வருகின்ற பட்சத்தில் குழந்தை பேறு கடினம் என்று ஜோதிடம் கூறுகிறது. ஆக வேறுவழி கொண்டு தான் குழந்தை பேறு என்பதனை பெறவேண்டும்.

குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்.

இந்த இடத்தில் அகம் என்கிற ஜோதிடத்தில் இருக்கும் சூட்சும வழியை கொண்டு செயல் படவைத்து குழந்தை பேறை பெறவைக்க வேண்டும். அந்த வகையில் அகம் என்றாலும் வீடுதான். அந்த அகத்தை சிறப்பு செய்வதில் குழந்தைகளுக்கு முதலிடம் உண்டு.

ஆகவே ஒரு இல்லத்தில் இருக்கும் இல்லத்தரசியின் கருப்பையில் இருக்கும் தேவையில்லாத கட்டிகளை கவனிக்க வேண்டும். இதற்கும் அந்த இல்லத்தில் இருக்கும் வாயுமூலைக்கும் மிகப்பெரிய நெருங்கிய தொடர்பு உள்ளது.

இந்த இடத்தில் நம்முடைய முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் கடும் காற்று மழை ஆகும். கடும் உறவும் பகையாகும். என்கின்ற சொல் வழக்கு உண்டு அந்த வகையில் தேவையில்லாத கட்டிகள் தான், அதாவது நீர்க்கட்டிகள் தான் குழந்தைகள் பிறப்பதை தடுக்கிறது என்று அறிவியல் சொல்கிறது.

அந்த வகையில் ஒரு வீட்டின் வாயு மூலை என்பது குழந்தை பிறப்பை நிர்நயம் செய்யும் இடம்.மற்றும் காற்று சம்பந்தப்பட்ட இடமும் கூட, அந்த காற்று இருந்தால் மட்டுமே இந்த பூமியில் மழை பெய்யும். அந்த வகையில் ஆண்களின் விந்தணு என்பது மழையாகவும்,பூமி என்பது பெண்ணாகவும் பார்க்க வேண்டும். ஆக அதிக காற்றால் அதிக மழையும், குறைந்த காற்றால் குறைந்த மழையும், இயல்பான காற்றால் இயல்பான மழையும் பெய்யும்,

நமக்கு எது தேவை என்று சொன்னால், நமக்கு என்ன தேவையோ அந்த மழை பெய்தால் போதும். அதுபோல குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பிறப்பதற்கும், குழந்தை இல்லாது போவதற்கும், தவறான அங்ககிண அமைப்பில் குழந்தைகள் பிறப்பதற்கும் வாயு மூலையில் வாஸ்து தவறுகளே காரணம்.

ஒரு குழந்தை பேறு சார்ந்த மருத்துவம் பார்பதற்கு முன்னால்,அதாவது மருத்துவரை பார்ப்பதற்கு முன்னால், கட்டாயமாக ஒரு வாஸ்து நிபுணரை சந்தித்து வாயுமூலையை பாருங்கள். அதேபோல உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் தாத்தாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

குழந்தை பிறந்து தாத்தா என்கிற ஒரு பதவியை அடைய கூடிய மனிதர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கூர்ந்து கவனித்து உங்களுக்கு குழந்தைப் பேறை உருவாக்கிக் கொள்ளுங்கள்.மறந்து விடாதீர்கள் தத்து என்கிற விசயத்திற்கும் குழந்தை பேறு சார்ந்த தீர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.