ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு!

நாடு முழுவதும், ’ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்’ திட்டத்தை கொண்டுவருவது மத்திய அரசின் திட்டமாகும். தற்போது தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் இந்த திட்டம் பரிசோதனை ரீதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த திட்டத்தைக் கொண்டுவரும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விற்பனை இயந்திரங்களையும் மாற்றம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டம் செயலுக்கு வரும்போது, அனைத்து மக்களும் பயன்பெற முடியும் என்பது முக்கிய அம்சமாகும்.