வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட விவகாரத்தை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதனை எதிர்த்துப் போராட்டம் நடதுவருகிறது.
தி.மு.க.தான் போலியாக போராட்டம் நடத்துகிறது. போட்டுத் தாக்கும் ராமதாஸ்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் டாக்டர் ராமதாஸ், இதுபோன்ற போராட்டங்களுக்குப் பின்னர் ஸ்டாலின்தான் இருக்கிறார் என்று நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் பேசியது இதுதான். ‘‘நாட்டில் எங்கும் யாரும் வன்னியர் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவே இல்லை. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும் சில கட்சிகளால் போராட்டம் துண்டி விடப்படுகிறது. ஆனால், அந்தப் போராட்டங்களில், 10 பேர் கூட பங்கேற்பதில்லை.
அப்படி விடுவது யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.தி.மு.க., தலைமையின் குடும்ப உறவினர்களால் நடத்தப்படும் இசை வேளாளர் அமைப்பு ஒன்று அண்மையில், திருச்சியில் கூடியுள்ளது. வன்னியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக அதில் அறிவித்துள்ளது.
இது, தி.மு.க.,வின் தூண்டுதல் அல்லாமல் வேறு என்ன? இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி, தி.மு.க., தலைமை தப்பிக்க முடியாது. ஏனெனில், அந்தக் கூட்டம் நடந்ததே, தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தான்.கூட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள், ஸ்டாலினின் மைத்துனர் ஜெய.ராஜமூர்த்தி உள்ளிட்ட உறவினர்கள் தான். மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட, தி.மு.க., மேல்மட்டத்திற்கு நெருக்கமானவர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த, தி.மு.க.,வின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதில் சொல்லுமா தி.மு.க..?