இஸ்லாமிய மக்களை தி.மு.க. வஞ்சிக்கிறது... குற்றம் சாட்டும் 'ஏகத்துவ ஜமாஅத்' மாநில தலைவர் இப்ராஹிம் .

இஸ்லாமிய மக்களின் ஆதரவு முழுமையாக தி.மு.க.வுக்குத்தான் என்பது போல் தவறாக சித்தரித்து வருவதாக குற்றம் சாட்டுகிறார், ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம்.


இவர் பேசுகையில், தி.மு.க.,வினர் நினைத்திருந்தால், கோவை குண்டு வெடிப்பை தடுத்திருக்கலாம். இஸ்லாமிய மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது தி.மு.க., தான். தி.மு.க., உடன் இன்று கூட்டணி வைத்திருக்கும் ஜவஹிருல்லா, அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் முன்னர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தவர்கள் தான். தி.மு.க., வை அகற்ற வேண்டும் என, பேசிய இவர்கள், இன்று கூட்டணி வைத்துள்ளனர். எம்.எல்.ஏ., சீட்டுக்காக இந்த அமைப்புகள் இஸ்லாமிய மக்களை அடகு வைக்கின்றனர்.

ஹஜ்' பயணத்துக்கு உதவித் தொகை உயர்வு, உலமாக்களுக்குமானியம் என, பல்வேறு சலுகைகளை வழங்கியது அ.தி.மு.க., அரசு. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் எவ்வித கலவரமோ, அசம்பாவிதங்களோ நடக்கவில்லை. அதேபோல், மத்தியில் பா.ஜ., ஆட்சி இருப்பதால், நாட்டில் எந்த கலவரமும் நடக்கவில்லை.

பா.ஜ., என்பது தேசத்துக்கான கட்சி, மக்கள் நலம் காக்கும் கட்சி என்பதை முதல்வர் இ.பி.எஸ்., உணர்ந்து அவர்களுடன் கைகோர்த்துள்ளார். நம்மை யார் பிரிக்கின்றனர், நமக்கு யார் எதிரி, நம்மை யார் தவறாக வழி நடத்துகின்றனர், என்பது குறித்து இஸ்லாமியர் சிந்திக்க வேண்டும்’’ என்று பேசினார்.

இஸ்லாமியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.